Translate this blog

Search This Blog

Saturday, 19 September 2015

மண் புழு உரம் - Natural manure

மண் புழு உரம் தயாரிப்பு

கழிவுகள் என்பது நாம் முறையாக பயன்படுத்த தவறிய மூலப்பொருள்கள் ஆகும். பொதுவாக வேளாண் கழிவுகள், கால்நடை கழிவுகள் போன்றவற்றை ஒரே இடத்தில் குவித்து வைக்கும் பொழுது கெட்ட நாற்றம் ஏற்படுகிறது. ஆனால் அவற்றில் இருந்து அதிக அளவிலான இயற்கை எருவை உருவாக்க முடியும். இந்த மதிப்புள்ள மூலப்பொருள்களை முறையாக மட்கவைப்பதின் மூலம் நமக்கு மதிப்பூட்டப்பட்ட எரு கிடைக்கிறது. இவ்வாறு அங்ககக் கழிவுகளை மக்கவைத்து வளம் குன்றிய மண்ணை பேணிக்காப்பதே மண்புழு உரத்தின் முதன்மையான பயனாகும்.
உள்ளுர் இரக மண்புழுக்களைக் கொண்டு மண்புழு உரம் தயாரித்தல்
உலக அளவில் சுமார் 2500 மண்புழு இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் 500 வகை இனங்கள் இந்தியாவில் உள்ளன. வெவ்வேறு மண்வகைக்கு ஏற்ப மண்புழு உரங்கள் மாறுபடும். எனவே மண்புழு உரம் தயாரிக்க அந்தந்த மண்ணிற்கு ஏற்ற மண்புழுக்களை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இந்தியாவில் பெரியோனிக்ஸ் எக்ஸ்கவேடஸ் மற்றும் லேம்பீட்டோ மெளருட்டி என்ற இரு இனங்களை பயன்படுத்துகிறோம். மண்புழுக்களை வளர்ப்பதற்கு, குழிகளையோ, தொட்டிகளையோ அல்லது வளைவான கட்டமைப்புகளையோ பயன்படுத்தி கொள்ளலாம்.
எவ்வாறு உள்ளூர்ரக மண்புழுக்களை தேர்வு செய்யமுடியும்?
1. மண்ணின் மேற்பரப்பில் தென்படக்கூடிய, புழுக்களின் ஆக்கிரமிப்புள்ள மண்ணை கண்டறிய வேண்டும்.

2. 500 கிராம் வெல்லம் மற்றும் ஒரு கிலோ மாட்டுச்சாணம் ஆகிய இரண்டையும் 2 லிட்டர் தண்ணீரில் கரைத்து 1 மீ x 1 மீ பரப்பளவில் மண்ணின் மேல் தெளிக்க வேண்டும்.

3. வைக்கோல் கொண்டு மூடிவிட்டு பின்பு அதன் மேல் கோணிப்பை வைத்து போர்த்த வேண்டும்.

4. 20-30 நாட்களுக்கு தண்ணீர் தெளிக்க வேண்டும்.

5. அந்த இடத்தில், மண்புழுக்கள் மேற்பரப்பில் அதிக அளவில் வரத்தொடங்கும். அவற்றை சேகரித்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

எரு-குழி தயாரித்தல்

எரு-குழி தயாரிப்பதற்கு பல முறைகள் இருந்தாலும், நாம் நம் வசதிக்கேற்ற வடிவமைப்பில், வீட்டின் பின்புறத்திலோ, தோட்டத்திலோ அமைக்கலாம். செங்கற்கள் கொண்டு ஒரு குழி, இரு குழி அல்லது வசதிக்கேற்ற அளவிளான தொட்டிகள் போன்றவற்றை முறையான நீர் வெளியேற்றக் குழாய்களுடன் அமைக்க வேண்டும். வேளாண் கழிவுகள் மற்றும் இதர பொருட்களின் கொள்ளவைக் கொண்டு தொட்டிகளின் அளவை தீர்மானம் செய்ய வேண்டும். தொட்டிகளின் சுவரின் நடுவில் சிறு குழிகளில் நீர் தேக்கம் செய்வதன் மூலம் புழுக்களை எறும்பு தாக்கத்தில் இருந்து காப்பாற்ற முடியும்.
நான்கு அறை தொட்டி / குழி முறை
நான்கு அறை தொட்டிகளின் மூலம் புழுக்கள் ஒரு அறையில் இருந்து மற்றொரு அறைக்கு எளிதாக செல்கின்றன. இதன் மூலம், புழுக்கள் ஒரு அறையில் உள்ள கழிவுகள் நன்கு மட்கியவுடன், மற்றொரு அறைக்கு சென்று கழிவுகளை மட்கச் செய்கின்றன.
மண்புழு படுக்கை தயாரித்தல்
மண்புழு படுக்கை
அடிப்பாகத்தில் சிறு கல் மற்றும் மணலின் (5 செமீ உயரம்) மேல் சுமார் 15-20 செமீ உயரத்திற்கு ஈரப்பதத்துடன் கூடிய வண்டல் மண் பரப்பப்பட்ட படுக்கை அமைக்க வேண்டும்.
வண்டல் மண்ணின் மீது மண்புழுக்களை விட்டவுடன், அவை மண்புழு படுக்கையை தன் சொந்த இருப்பிடம் போல் எண்ணுகின்றன. குழியை 2 மீ x 1 மீ x 0.75 செமீ என்ற அளவிலும், மண்புழு படுக்கை 15 - 20 செமீ என்ற அளவிலும் அமைய வேண்டும்.
· கையளவு மாட்டுச்சாணத்தை படுக்கையின் மீது தூவ வேண்டும். பின்பு 5 செமீ உயரத்திற்கு வெட்டிய வைக்கோலையோ அல்லது இயற்கை கழிவுகளையோ இட வேண்டும். அடுத்த 30 நாட்களுக்கு தேவைப்படும்போதெல்லாம் நீர் தெளித்து ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும்.
· படுக்கை வறண்டோ அல்லது சொதசொதப்பாகவோ இருக்கக்கூடாது. பறவைகளிடம் இருந்து காக்க தென்னை அல்லது பனை ஓலைகள் அல்லது கோணிப்பைகள் கொண்டு மூடி வைக்க வேண்டும்.
· வெப்பத்தை இழுக்கும் தன்மையுடையது என்பதால் பிளாஸ்டிக் பைகளை உபயோகிக்கக் கூடாது. 30 நாட்கள் கழித்து ஈரப்பதமுடைய தாவரம் அல்லது கால்நடைக் கழிவுகளை, சமையலறை, உணவகம், வயல் போன்ற இடங்களில் இருந்து சேகரித்து அவற்றை சீர் செய்து 5 செமீ அளவிற்கு நிரப்ப வேண்டும். இவ்வாறு வாரம் இருமுறை செய்ய வேண்டும். இயற்கை கழிவுகளை மண்வெட்டி கொண்டு முறையே கலக்கிவிட வேண்டும்.
· சரியான அளவு ஈரப்பதத்தை பராமரிக்க, முறையாக நீர் தெளிக்க வேண்டும். வானிலை வறட்சியாக இருந்தால் அடிக்கடி நன்றாக நீர் தெளிக்க வேண்டும்.
எப்பொழுது எரு தயாராகும்?

1. அடர்-காப்பி நிறத்தில், பொடியாக, குருணையாக, எடைகுறைவாக, துளைகள் நிரம்பிய மெல்லிய மண் அடுக்கமைப்புடன் இருக்கும் தருணமே தொழுஉரம் தயார் நிலையில் இருக்கும் தருணம் ஆகும்.

2. 60 - 90 நாட்களில் (குழி அல்லது தொட்டியின் அளவை பொருத்து) தொழு எரு தயாராகி விடும். புழுக்களின் கூடுகளைப் பார்த்து, குழியிலிருந்து தொழு எருவை அறுவடை செய்யலாம்.

3. புழுக்களை தொழு எருவிலிருந்து எளிதாகப் பிரித்து எடுக்க, எரு எடுக்கும் 2-3 நாட்களுக்கு முன்பிருந்து நீரிடுவதை நிறுத்த வேண்டும். இதனால் 80 சதவீத புழுக்கள் படுக்கையின் அடிப்பகுதிக்குச் சென்றுவிடும்.

4. மேலும் புழுக்களை சல்லடை அல்லது வலைகள் கொண்டும் பிரித்து எடுக்கலாம். புழுக்களும், தடிமனான பொருட்களும் வலையின் மீது நின்று விடும். இதனை குழியில் கொட்டி திரும்பவும் பயன்படுத்தலாம். மட்கிய உரம் மண்வாசனை போன்ற மணம் உடையது. முழுமையாக மக்காமல் இருந்தால் அதிலிருந்து கெட்ட வாடை வரும். இது நுண்ணுயிரின் செயல்பாடு முடிவடையாமல் நடந்து கொண்டிருக்கிறது என்பதை தெளிவாக்கும். புளித்த வாடை வந்தால், அது பூஞ்சாணம் மற்றும் அதிக வெப்பத்தின் அறிகுறி ஆகும். இதனால் தழைச்சத்து இழப்பு நேரிடும். இவ்வாறு இருப்பின், நல்ல காற்றோட்டம் ஏற்படுத்தி, நாறு போன்ற பொருட்களை சேர்த்து உலர்த்த வேண்டும். பின்பு மட்கிய எருவை சல்லடை கொண்டு சலித்து எடுக்க வேண்டும்.

5. சேகரித்த பொருட்களை சூரிய ஒளியில் குவித்து வைக்க வேண்டும். இதனால் புழுக்கள் குளிர்ச்சியான அடிப்பகுதிக்கு சென்றுவிடும்.

6. இரு அறை அல்லது நான்கு அறை குழியில் நீரிடும் போது, முதல் அறைக்கு நீரிடுவதை நிறுத்தி விடவேண்டும். இதம் மூலம் புழுக்கள் தானாகவே ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்கு செல்கின்றன. இவ்வாறு செய்வதால் சுழற்சி முறையில் தொடர்ச்சியாக எருவை அறுவடை செய்ய முடிகிறது.

மண்புழு மட்கு உரத்தின் பயன்கள்

· இயற்கை கழிவுகளை, மண்புழுக்களைக் கொண்டு மட்க வைப்பதன் மூலம், நல்ல கட்டமைப்புடன் கூடிய, நச்சுத்தன்மையற்ற நல்ல மதிப்பூட்டமுள்ள எரு கிடைக்கிறது.
· பயிர் வளர்ச்சிக்கு தேவையான கணிமப்பொருள்களையும், நுண்ணூட்டங்களையும் பயிர்களுக்கு எளிதில் கிடைக்கச் செய்து நல்ல கலப்பு உரமாக செயல்படுகிறது.
· தொழுஉரம், மண்ணில் உள்ள நோய் பரப்பக்கூடிய நுண்ணுயிர்களை குறைத்து விடுகிறது.
· பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் உள்ள மக்களுக்கும், சமுகத்தின் கீழ்தட்டில் உள்ள மக்களுக்கும், மண்புழு தயாரித்தல் ஒரு சிறந்த குடிசைத் தொழிலாக அமைந்து அவர்களின் வாழ்க்கைக்கு கூடுதல் வருமானத்தை அளிக்கிறது.
· ஒவ்வொரு கிராமத்திலும், வேலையில்லாத இளைஞர்களையும் பெண்களையும் இணைத்து கூட்டுறவு சங்கங்கள்அமைத்து, மண்புழு உரம் தயார்செய்யலாம். மேலும் அவர்களே விலை நிர்ணயம் செய்து கிராம விவசாயிகளுக்கு விற்பனை செய்து ஒரு புதுமை படைக்கலாம். இதன் மூலம் இளைஞர்கள் நல்ல வருமானம் பெறுகின்றனர். அதோடுமட்டுமல்லாமல் நல்ல தரமான தொழுஉரத்தை அளித்து ஒரு நல்ல நீடித்த வேளாண்மை தொழில் செய்ய ஊக்குவிக்கிறது.
ref by:https://www.facebook.com/groups/1403706829955435/permalink/1478777529115031/
posted by ganesh-9843479843

Tuesday, 15 September 2015

free desi cows


RABBIT REARING - முயல் வளர்ப்பு

முயல் வளர்ப்பு ,. , உண்மையில் குறைந்த முதலீட்டில் அனைவரும் எளிதில் செய்யக் கூடிய தொழில் . வீட்டில் இருந்து கொண்டு சில்லறை செலவுக்கு கணவனை எதிர் பார்க்கும் .பெண்கள் இதை செய்யலாம்.. வேலை
தேடிக் கொண்டிருக்கும் இளைஞர்களும் தங்கள் தினச் செலவுக்கு அப்பாவின் கையை எதிர் பார்க்காமல் இருக்க இதை செய்யலாம்..
முதலீடு செய்த 6 மாதங்களில் இருந்து உங்களுக்கு வருமானம் கிடைக்க ஆரம்பித்து விடும். இதற்க்கு தேவையான முதலீடு முயல் வாங்க சிறிது பணமும் ,முயல் வைக்க கூண்டும் இவற்றை வைக்க சிறிது இடமும் போதும் .இனி தேவையான பணம் எவ்வளவு என்று பார்க்கலாம்.
ஒரு மாத முயல் குட்டி ஒன்றின் விலை 200 ரூபாய். உங்கள் தொழில் தொடங்க முதலில் 25 முயல்களுடன் ஆரம்பித்து பாருங்கள். 25 முயல்களின் விலை ரூ.5000. இவற்றை வைக்க கூண்டு செய்ய ஆகும் செலவு ரூ.6000. இது தவிர இவற்றிற்கு வேண்டிய உணவு வைக்க மற்றும் தண்ணீர் வைக்க சிறு பாத்திரங்கள் வகையில் ரூ.250. ஆக ஒரு சிறு முயல் பண்ணை வைக்க ஆகும் செலவு அதிக பட்சம் ரூ 11,250. .வீட்டில் பின் புறம் இடம் வசதி இருந்தால் கூண்டுக்கு இவ்வளவு செலவு செய்யத் தேவை இல்லை.
இனி இதில் எப்படி வருமானம் கிடைக்கிறது என்று பார்ப்போம்.
பெண் முயல் 6 மாதங்களுக்கு பிறகு குட்டி போட தொடங்குகிறது. .குறைந்த பட்சம் 3 இல் இருந்து 8 குட்டி வரை ஒரு பெண் முயல் குட்டி போடும்..குட்டி போட்ட பெண் முயல் தன குட்டிகளுக்கு தானே பால் கொடுத்து ஒரு மாதம் வரை வளர்க்கும்..குட்டிகளை வளர்க்க வேண்டிய பிரச்சினை உங்களுக்கு கிடையாது. குட்டி முயல்களை நீங்கள் எளிதில் விற்று விடலாம்.
4 பெண் முயல்களுக்கு ஒரு ஆண் முயல் என்ற கணக்கில் முயல் வாங்குங்கள். 25 முயல் என்னும் பொது உங்களிடம் 20 பெண் முயல்களும் 5 ஆண் முயல்களும் இருக்கும் படி வாங்க வேண்டி வரும்.. 30 நாட்களுக்கு ஒரு முறை பெண் முயலை ஆன் முயலுடன் சேர்க்கை விடலாம்
அனால் அதை விட 45 தினங்களுக்கு ஒரு முறை விடுத்ல் சிறந்தது.
பிறக்கும் குட்டிகளின் ஒன்றிரண்டு இறந்து விட வாய்ப்புண்டு. எப்படி இருப்பினும் சராசரியாக ஒரு பெண் முயல் மூலம் உங்களுக்கு 4 குட்டிகள் நல்ல வளர்ச்சியுடன் கிடைக்கும். வாய்ப்பு உண்டு. ஆக 20 பெண் முயல்களின் மூலம் கிடைக்கும் குட்டிகள் 80. ஆகும். ஒரு குட்டியை ரூ 200 க்கு விற்பதன் மூலம் 80 குட்டிகளை ரூ. 16.000 வரை விற்கலாம்.
இதில் உங்களுக்கு வளர்ப்பதற்கான செலவு என்று பார்த்தால் வளர்ந்த முயல் ஒரு நாளைக்கு 250 கிராம் வரை அதிக பட்சம் உண்ணும் .
மனிதர்கள் உண்ணும் அனைத்து காரமில்லாத உணவுகளையும் முயல்கள் உண்ணும். .நல்ல ஆரோக்கியமுடன் வளர்க்க வேண்டும் என்று என்னும் நாம் காலையில் காய்கறி கடைகளில் சொல்லி வைத்தால் காலி பிளவர் தழை இலவசமாய் வாங்கிக் கொள்ளலாம். முட்டை கோஸ் தழையை விரும்பி சாப்பிடும் .ஆனால் கழிவுகளில் இருந்து வரும் நாற்றம் அதிகம் இருக்கும் என்பதால் கோஸ் தழையை முடிந்தவரை தவிர்க்கவும்.. மதியம் 3 மணிக்கு மேல் ஒரு 100 கிராம் கோதுமை தவிடை சிறிது தண்ணீரில் கலந்து பாத்திரத்தில் வைத்து விட்டால் உண்டு விடும். ஒரு கிலோ கோதுமை தவிடு ரூ.16 க்கு கடைகளில் கிடைக்கிறது. ஒரு மாத செலவு ஒரு முயலுக்கு 3 கிலோ , 25 முயல்களுக்கும் சேர்த்து 75 கிலோ ஆகும்.
ஆக மொத்தம் 75 கிலோவிற்கு ரூ.1200 மாத உணவு வகையில் செலவு ஆகும்.
6 மாத ஆரம்ப கால செலவு மொத்தம் ரூ.7200. ஆண்டிற்கு 8 முறை ஒரு பெண் முயல் குட்டி போடும் . ஆக ஒரு முயல் மூலம் 32 குட்டிகள்..20 (32x 20)இன் மூலம் 640. (ஒரு குட்டி விலை 200). குட்டிகள். 640x 200= 1,29,000.
ஆண்டு வருமானம் 640x 200=1,29,000 .ஆண்டு செலவு 1200x 12=14,400
நிகர லாபம் =1,14,600/12=10,750
இதில் நான் தந்துள்ளது குறைந்த பட்ச லாபத்தையே . அதிக லாபம் பெற விரும்புபவர்கள் ஆண் முயல்களை விற்று விட்டு பெண் முயல்களை இனவிருத்திக்கு வைத்துக் கொண்டு அதிகம் சம்பாதிக்கலாம்.. பெரிய முயல்களை கடைகளில் கிலோ ரூ.250 வரை மாமிசத்திற்க்காக எடுத்துக் கொள்கிறார்கள். அதிக பட்சம் 6 மாதத்திற்குள் 2 1/2 கிலோ வரை ஒரு முயல் எடை வரும்..
25 முயல்கள் விலை 200 வீதம் .. ... 5000
கூண்டு செய்ய செலவு .......................6000
------
மொத்த ஆரம்ப கால செலவு ........11,000
-------=
மாத செலவு 75 கிலோ தவிடு ரூ.16 வீதம்....1200x 12=14,400
ஆண்டு வருமானம்
--------------------------
ஒரு முயல் ஆண்டிற் க்கு 32 குட்டிகள் 20 இன் மூலம் =640
ஒரு குட்டியின் விலை 200 வீதம் 640 க்கு 200x 640 =1,29,000
மொத்த செலவு 14,400;+அடிப் படை செலவு 11,250.........= 25,650
--------
1,03,350
----------
ஒரே ஆண்டில் போட்ட முதலீட்டையும் எடுத்து விட்டு லாபமும் சம்பாதிக்க
சிறந்த முதலீடு இது என்பதை நிச்சயம் ஒத்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
REF: https://www.facebook.com/groups/1403706829955435/permalink/1486494838343300/
POSTED BY GANESH -9843479843

HOW TO MAKE PALAYA SORU?

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலை
கழகத்தில் ஒரு ஆராய்ச்சி செய்தார்கள்.
பழையதை வைத்து.முன்தினம் வடித்த
சோறை நீர்விட்டு அதில் தயிரையும்
சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் என்ன பலன்
கிடைக்கும் என்று.
கிடைத்த முடிவுகளை பார்த்து மூக்கின்
மேல் விரலை வைத்துக்கொண்டு
சொன்னார்களாம் தென்னிந்தியர்கள் மனிதர்கள்
அல்ல அவர்கள் தேவர்களாகத்தான் இருக்க
வேண்டும்.
ஏனெனில் அவர்களின் பாரம்பரிய உணவான
இந்த பழையதையும் தயிரையும் உண்டால்
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.!
வெள்ளை அணுக்கள் அதிகரிக்கிறது.!
உடல் சோர்வை போக்குகிறது.!
உடலில் உள்ள அனுச்சிதைவுகளை
தடுக்கிறது.!
உடல் சூட்டை தணிக்கிறது.!
வயிற்றிலுள்ள பழைய கழிவுகளை விரைந்து
வெளியேற்றுகிறது.!
உற்சாகமான மனநிலையை தருகிறது.!
என்று பலவிதமான நன்மைகளை
பட்டியலிட்டனர்.
இந்த ஆராய்ச்சி முடிவுகள் வெளிவந்ததும்.
நம்மவர்கள் குப்பை உணவான பர்கரையும்
பீட்சாவையும் புரோட்டவையும் தேடி
அலைவது போல உலகமே பழையச்சோறை
தேடி அலைந்தது
HOW to MAKE PALAYA SORU? என்று அமெரிக்கர்கள் இந்திய நண்பர்களிடமும் இணையத்திலும்
கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டனர்.
நட்சத்திர ஓட்டல்களிலெல்லாம்
பழையச்சோறை புதிய நவீன உணவு
பட்டியலில் சேர்த்துவிட்டனர்.
ஆனால் இன்றைக்கு நம்மவர்கள்
சளிபிடிக்கும், உடல் குண்டாகி விடும்
என்றெல்லாம் சொல்லி பழையதை பழித்து
வருகிறார்கள்.
அதுபெரிய தவறு வெயில் காலங்களில்
மட்டுமல்ல அனைத்து நாட்களிலும்
சாப்பிடுவதற்கேற்ற அருமையான உணவு
பழையசோறு.!
சாப்பிட்டு மீதம் உள்ள சாதத்தில் சுமார் ஒரு
மணிநேரம் கழித்து தேவையான அளவு
தண்ணீரை ஊற்றி மூடிவைத்து 6 முதல் 8
மணிநேரம் கழித்து திறந்து பார்த்தால்
அமிர்த பானம் தாயரிக்க தேவையான முக்கிய
பொருளான பழையது தயார்.
இதில் தேவையான அளவு சாதத்தை ஒரு
மண்சட்டியில் எடுத்து அதனுடன் தயிர்
கலந்து சின்னவெங்காயம், வெண்டைக்காய்
ஆகிய வற்றையும் சிறிது சிறிதாக
வெட்டிப்போட்டு, தேவைப்பட்டால் சிறுது
உப்பையும் ஒரு பச்சை மிளகாவையும்
கலந்து நன்றாக பிசைந்து சாப்பிட்டு
பாருங்கள்.
ஆகா.! இதுதான் தேவாமிர்தம் என்பதை
நீங்களே ஒப்புக்கொள்வீர்கள்.
இந்த உணவு முறையை வாரத்தில் மூன்று
நாட்கள் மட்டுமாவது கடைபிடியுங்கள்
பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுத்தவர்கள்
தேவர்கள்.!
அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க
கற்றுக்கொடுத்தவர்கள் நம் முன்னோர்!!!

ref : https://www.facebook.com/groups/1403706829955435/
posted by ganesh-9843479843

பலன் தரும் பசும்தீவன வகைகள்..!


நமது நாட்டில் வேளாண்மை மற்றும் கால்நடைகள் இணைந்த கலப்புப் பண்ணை முறையே கையாளப்பட்டு வருகிறது. தரமான கால்நடை வளர்ப்புக்கும், அதிக வருமானம் பெறவும் பசுந்தீவனப் பயிர்களை சாகுபடி செய்வது அவசியம்.
கால்நடைகளுக்கு புரதம், நார்ச்சத்து, உயிர் மற்றும் தாதுச் சத்துகளை அளிப்பதுடன் கால்நடைகளின் உடல் வெப்பநிலைக் கட்டுப்பாட்டிலும் பெரும் பங்கு வகிக்கிறது பசுந்தீவனம். சரியான இனப் பெருக்கத்துக்கும் இது இன்றியமையாதது.
பசுந்தீவனத்தை பயிர் செய்வதன் மூலம் நிலத்தின் மண்வளம், மண்ணின் நீர் தாங்கும் திறன் அதிகரிக்கிறது.
களைகள் மற்றும் தேவையற்ற புல், பூண்டுகளின் வளர்ச்சி தடுக்கப்படுகிறது.
பயறு வகை பசுந்தீவனங்களை வளர்ப்பதால் மண்ணில் தழைச்சத்தின் வளம் கூடுகிறது.
பசுந்தீவனப் பயிர்களை தேர்ந்தெடுக்கும் முன் முக்கிய அம்சங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
பயிர் சாகுபடி முறை எளிதாக இருக்க வேண்டும்.
குறுகிய காலத்தில் அதிக விளைச்சல் தர வேண்டும்.
ஊட்டச்சத்து செறிவுள்ளதாகவும் இருக்க வேண்டும். காலநிலை மற்றும்
மண் அமைப்பு பாதகமாக மாறினாலும், விளைச்சலில் பாதிப்பு இருக்கக் கூடாது.
பூச்சி மற்றும் நோயால் பாதிக்கப்பட கூடாது.
பசுந்தீவன வகைகள்:
-----------------------------
புல்வகைத் தீவனப் பயிர், தானிய வகைத் தீவனப் பயிர், பயறு வகைத் தீவனப் பயிர், மர வகைத் தீவனப் பயிர் ஆகியவை பசுந்தீவனங்களாகும்.
புல் வகை:
----------------
இந்தத் தீவனத்தில் புரதச்சத்து 1.5 சதம் முதல் 2 சதம், நார்ச்சத்து 6.25 சதம் முதல் 9 சதம் வரை இருக்கும்.
இறவைப் யிராக நேப்பியர், கம்பு ஒட்டுப்புல் கோ-1, கோ-2, கோ-3 பயிரிடலாம். கினியாப் புல், பாரா புல், கொளுக்கட்டைப் புல் பயிரடலாம.
மானாவரியாக கொளுக்கட்டை புல், தீனாநாத் புல் ஆகியவை பயிரிடலாம்.
தானிய வகை:
--------------------
இறவையாக மக்காச் சோளம் பயிரிடலாம்.
மானாவரியாக தீவனச் சோளம், தீவனக் கம்பு பயிரிடலாம்.
பயறு வகை:
-----------------
பசுந்தீவனத்தில் பயறு வகைகள் முக்கியமானதாகும். ஏனெனில், இந்த வகை தீவனத்தில் 3 சதம் முதல் 4 சதம் வரை புரதச் சத்தும், கால்சியமும் செறிந்துள்ளது.
தானிய வகை பசுந்தீவனத்துடன், பயறு வகை தீவனத்தை 70:30 விகிதத்தில் கலந்து கொடுப்பது அவசியம்.
பயறு வகையால் வேர் மூலம் மண்ணில் நைட்ரஜன் நிலைப்படுத்தப்பட்டு தழைச்சத்து வளம் அதிகரிக்கிறது.
பயறு வகைகளில் இறவையாக வேலி மசால், முயல் மசால், தீவனத் தட்டைப் பயறு, காராமணி, துவரை பயிரிடலம். மானாவரியாக முயல் மசால், சிராட்ரோ, டெஸ்மோடியம், சென்ட்ரோ, சங்கு புஷ்பம், கொள்ளு, துவரை பயிரிடலாம்.
குளிர்ப் பிரதேசங்களில் பெர்சீம், மொச்சை வகைகளைப் பயிரிடலாம்.
கலப்பு பயிரிடுதல் முறை:
-----------------------------------
பயறு வகை தீவனப் பயிர்களையும், தானிய வகைத் தீவனப் பயிர்களையும் கலப்புப் பயிராகக் கலந்து பயிரிடும்போது தனித்தனியே கிடைக்கும் மகசூலை விடவும் கூடுதலாக மகசூல் கிடைக்கும்.
கோ 1, 2, 3 ஆகியவற்றை 3 வரிசையாகவும், வேலி மசால் ஒரு வரிசையாகவும் கலந்து பயிரிடலாம்.
தீவனச் சோளம் 2 வரிசை, சோயா மொச்சை ஒரு வரிசையாகவும் பயிரிடலாம்.
கொளுக்கட்டை புல் 3 வரிசை, முயல் மசால் ஒரு வரிசையாகவும் பயிரிடலாம்.
ref: https://www.facebook.com/groups/1403706829955435/
posted by ganesh-9843479843