Translate this blog

Search This Blog

Thursday 22 January 2015

Green bean seeds - பச்சை பயிறு

உடல் எடையை குறைக்க வேண்டுமா? பச்சை பயிறு சாப்பிடுங்க
பருப்பு வகைகளை அடிக்கடி உண்ணும் போது ஏராளமான சத்துக்கள் உடலுக்கு கிடைக்கின்றன.
குறிப்பாக பருப்புக்களில் ஒன்றான பச்சை பயிறு மற்றும் பாசிப் பருப்பை தவறாமல் வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், அதில் நிறைந்துள்ள சத்துக்களால் பல நன்மைகளை பெறலாம்.
பச்சை பயிறு உடலில் ஏற்படும் நோய்களை குணப்படுத்துவதோடு, சருமம் மற்றும் கூந்தல் பிரச்சனைகளையும் சரி செய்கிறது.
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைக்கவும், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும் பச்சை பயறு உதவுகிறது. எனவே அன்றாடம் பச்சை பயறு அல்லது பாசிப் பருப்பை உணவில் சேர்த்து வாருங்கள்.
சத்துக்கள் நிறைந்தது
பச்சை பயற்றில் இரும்புச்சத்து வளமாக உள்ளது. நீங்கள் இரும்புச்சத்து குறைபாட்டினால் அவஸ்தைப்பட்டால், அன்றாட உணவில் பச்சை பயறை சேர்த்து வாருங்கள். இதனால் உடலுக்கு வேண்டிய இரும்புச்சத்து கிடைத்து, இரத்த சோகை ஏற்படும் வாய்ப்பில் இருந்து தப்பிக்கலாம்.
சரும புற்றுநோய்
பச்சை பயறு சரும புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். அன்றாடம் வெளியில் அதிகம் சுற்றுவோர், உணவில் பாசிப்பருப்பு அல்லது பச்சை பயறை சேர்த்து வந்தால், சரும புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
எடையைக் குறைக்கும்
உடல் பருமனைக் குறைக்கவும், உடல் எடையை சீராக பராமரிக்கவும், பச்சை பயறு பெரிதும் உதவியாக இருக்கும். இது நீண்ட நேரம் வயிற்றை நிறைவாக வைத்திருக்கும்.
உடல் எடையை குறைக்க முயற்சிப்போர், சப்பாத்தி சாப்பிடும் போது, அத்துடன் ஒரு பௌல் பச்சை பயறை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் உடலுக்கு ஒரு நாளைக்கு வேண்டிய சத்துக்கள் கிடைப்பதுடன், உடல் எடையும் கட்டுப்பாட்டுடன் இருக்கும்.

ref: https://www.facebook.com/thiliErunthalikepanunka/photos/a.275118342648565.1073741829.275008889326177/399237113570020/?type=1&theater
posted by ganesh - 9843479843


Wednesday 21 January 2015

Nutrient-rich sweet potato - ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சர்க்கரைவள்ளி கிழங்கு


சர்க்கரைவள்ளி கிழங்கு உலகின் மிக சத்தான உணவுகள் ஒன்றாகும். சர்க்கரை வள்ளி கிழங்கில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. அதில் வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் குறிப்பிடத்தக்கது.. ஆராய்ச்சி மூலம் சர்க்கரை வள்ளி கிழங்கில் ஆக்ஸிஜனேற்ற நிறமியாகிய பூநீலம் ஏராளமாக உள்ளது என்று நிருபிக்கப்பட்டுள்ளது. இது புற்றுநோயை தடுக்கும் குணம் கொண்டது..
இது கடின உலோகங்கள் மற்றும் பிராணவாயு உறுப்புக்களில் உண்டாகும் ஆபத்தை குறைக்கிறது. ஆக்சிஜனேற்ற பண்புகள் சர்க்கரை வள்ளி கிழங்கின் சேமிப்பு நொதிகளை உற்பத்தி செய்கின்றது-. சர்க்கரை வள்ளி கிழங்கு சேதமடைந்து இருப்பின் தன்னுடைய பகுதிகளை சரிசெய்து கொள்ள ஆண்டிஆக்சிடெண்ட் திறனை பயன்படுத்தி சரிசெய்து கொள்கிறது.
சர்க்கரைவள்ளி கிழங்கில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள் 

கலோரிகள்- 90 

பேட் -0 கிராம்

செறிவூட்டப்பெற்ற கொழுப்பு -0 கிராம்

கொலஸ்ட்ரால்- 0மில்லிகிராம்

கார்போஹைட்ரேட் -21 கிராம்

புரதம் -2 கிராம்

நார்ச்சத்து -3கிராம்

சோடியம் -36 மில்லிகிராம்

வைட்டமின் ஏ -19.218 சர்வதேச அலகு

ஃபோலிக் அமிலம்- 6 மைக்ரோகிராம்

பேண்டோதெனிக் அமிலம் -1 மில்லிகிராம்

வைட்டமின் பி- 61 மில்லிகிராம்

வைட்டமின் சி- 20 மில்லிகிராம்

வைட்டமின் ஈ -1 மில்லிகிராம்

கால்சியம் 3-8 மில்லிகிராம்

மாங்கனீஸ் -1 மில்லிகிராம்

கரோட்டினாய்டுகள் -11.552 மைக்ரோகிராம்

பொட்டாசியம் -475 மில்லிகிராம்

மாக்னீஷியம்- 27 மில்லிகிராம்

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சர்க்கரை வள்ளி கிழங்கை உணவில் சேர்த்து சாப்பிட்டு வாழ்வை ஆரோக்கியமாக்கிடுங்கள்.
ref : https://www.facebook.com/Siddha.Med?fref=nf
posted by Ganesh - 9843479843



Tuesday 13 January 2015

A small imagination - ஒரு சிறிய கற்பனை

ஒரு சிறிய கற்பனை : ( நிஜமானால் நிச்சயம் சந்தோஷமே ) 

இந்த கணிப்பொறி துறையில் வேலை பார்த்த வல்லுனர்கள் வெளியில் அனுப்பி விட்டதாக தகவல்கள் படித்தேன் .
அப்படி வந்த நண்பர்கள் அனைவரும் அல்லது சிலர் ஒன்று இணைந்து ஒற்றுமையாக ஒரு விவசாய குழுவை அமைத்து களத்தில் நேரடியாக இறங்கினால் மிக பெரிய மற்றம் நிகழும் .

முதலில் குத்தகைக்கு 5 முதல் 6 வருடங்கள் நிலம் பிடித்து குறைந்தது 10 முதல் 20 ஏக்கர் வரை ஒரு திட்டம் போட்டு ஒருகிணைந்த பண்ணையம் அமைத்து வெற்றி பெறலாம் .

இங்கு கிடைப்பதை வைத்து உண்மையான சந்தோஷம் அடையலாம் .போலியான வாழ்க்கை இல்லாமல் போகும் . இதில் இழக்கவேண்டிய போலி சந்தோஷம் மிகவும் அதிகம் .அதனை ஏற்று கொள்ளும் மன பக்குவம் தேவை .இதில் பணம் கணிபொறி துறை வருவது போன்று பணம் வராது .போலியான நிறைய விடயங்கள் இல்லை என்பதால் நிச்சயம் வரும் பணம் சந்தோஷமான நிம்மதியை கொடுக்கும் .

முக்கியமாக நேரடியாக களத்தில் இயங்க வேண்டும் . சிறிது காலத்திருக்கு பிறகு வேலைக்கு ஆட்கள் அழைக்காமல் நேரடியாக வேலை செய்ய வேண்டும் .( ஆரம்பத்தில் மிகவும் கஷ்ட பட வேண்டி வரும் சிறிது காலத்தில் மனம் சந்தோசமும் ,உடலும் ஆரோக்கியம் அடையும் .

இங்கு எதுவும் ஒரு பட்டன் தட்டினால் கிடைக்காது என்பதையும் மனதில் கொள்ள வேண்டும் . பொறுமை மிக அவசியம் .நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ஷி காண முடியும் .வலக்கை அனுபவித்து நிஜமான ஒரு வாழ்கை இருக்கும் .

பயிற்சிக்கு உதவுகிறேன். பயிற்சி என்றால் ஒரு விவசாயி உடன் அவர்களின் நிலத்தில் நேரடியாக 3 மாதம் தங்கி கற்றுக்கொள்ள வேண்டும் . ( மற்ற விசயங்களை பின்பு பேசுவோம் ) .


### உங்கள் கருத்துக்களையும் பகிரவும் . ###

1. பசு / எருமை கன்றுகள் வாங்கி வளர்த்து விற்பனை செய்யலாம் ( வருட வருமானம் )

2 . பல வகையான கீரைகள் விளைவிக்கலாம் ( நிச்சயம் பயிற்சி எடுத்தவர்கள் இருக்கலாம் )

3. காய்கறிகள் பயிர் செய்யலாம் .அதில் விதைகள் மூலம் வருமானம் பார்க்க இயலும் . விதையும் சேமிப்பு நடக்கும் .

4.பல வகையான ( முட்டைஉற்பத்தி / கறி /அழகு )கோழிகள் ,சில வகையான வாத்துக்கள் ,ஆடுகள் வளர்க்கலாம். ஏன் வாய்ப்பு இருந்தால் குறைந்த விலையில் விருக்கும் அழகு கிளிகள் ( Loverbirds) வளர்த்து விற்பனை செய்யலாம் .

5.மானாவாரியில் வரும் சிறுதானிய பயிர்களை வளர்த்து பயன் அடையலாம். ( மதிப்பு கூட்டலாம் )

6.பால் உற்பத்தி செய்தும் மோர், தயிர் , நெய் என்று மதிப்பு கூட்டி செய்தால் விற்பனை வாய்ப்பு கிடைக்கும் .

7.கிடைக்கும் கழிவுகளை பயன் படுத்தி உரம் தயாரிக்கலாம் .

8. ஒரு குழுவினர் வீட்டு தோட்டம் அமைத்து கொடுக்கலாம் , பராமரிப்பு சேவை .

9 . தரமானதாக நேரடியாக கடை வைத்தோ , சந்தைகளில் விற்கலாம் .இன்றும் மக்களிடம் நல்ல பொருட்களை தேடி வாங்கும் வழக்கம் உள்ளது

10. தீவன பயிர்கள் உற்பத்தி செய்து விற்பனை செய்யலாம் .


இது என் முகநூல் நண்பரின் கற்பனை எண்ணுடாதும் கூட...

ref : https://www.facebook.com/photo.php?fbid=1582840915285939&set=a.1412179945685371.1073741828.100006801365349&type=1

posted by Ganesh - 9843479843



Weeds control - களைக்கொல்லி


இலவசமாக கிடைக்கும் ''களைக்கொல்லி'' !!! -- இன்று களைகொல்லிக்கு செலவு செய்யாத விவசாயிகளே இல்லை. பூச்சி மருந்தைவிட அதிக விஷத்தன்மை களைகொல்லியில் உள்ளது. இது தெரிந்தும் வேறு வழி இல்லாமல் பயன்படுத்துபவர்கள் அதிகம். ஆனால், அதற்க்கு மிக சிறந்த மாற்று நம்மிடமே உள்ளது. அதில் மண்ணை கெடுக்கும் விஷம் இல்லை. மண்ணை வளமாக்கும் மந்திரம் உள்ளது. அதுதான் கோமியம் எனக்கூறும் ''மாட்டு யூரின்''!!!. உண்மை மாட்டு யூரின் ஒரு மிக சிறந்த கலைகொல்லியாகவும் செயல்படுகிறது. தண்ணீர் கலக்காமல் களைகளின் மேல் மாட்டு யூரினை தெளித்து விட்டால் போதும் களைகள் காய்ந்து விடும். இரண்டு அல்லது மூன்று முறை தெளித்தால் அனைத்து கலைகளும் காய்ந்து விடும். நமது மண்ணும் நலம் பெரும். யூரினை 1௦ நாட்களுக்கு மேல் வைத்து பயன்படுத்துவது சிறந்தது. இதை வீட்டில் வளரும் களைகளுக்கும் பயன்படுத்தலாம்.

ref : https://www.facebook.com/profile.php?id=100005922287558&fref=nf
posted by Ganesh - 9843479843




why we are offering milk and egg to snakes - பாம்புகளுக்கு பால் மற்றும் முட்டை கொடுப்பதன் ஏன்


பாம்பிற்கு பால் ஊற்றுவதும் ,முட்டை வைப்பதற்கும் காரணம் என்ன ?
உண்மையும்,விஞ்ஞான ரீதியாக ஒத்துக்கொண்ட விடயமும் என்னவென்றால் முட்டையையும் பாலையும் பாம்பு குடிக்காது.பின்னர் எதற்கு புற்றுக்குள் பால் ஊற்றுகிறார்கள்?
ஆதி காலத்தில் மனிதனுக்கு பெரிய பிரச்சனையாக இருந்தது பாம்புகள். காரணம் அடர்ந்த காடுகள்,மனித நடமாட்டம் மிக மிக குறைவு.மனிதனை விட பாம்புகள் அதிகம் காணப்பட்டது .
ஒரு உயிரினத்தை கொல்லும் உரிமை இந்து சமயத்தை பின்பற்றும் மக்களுக்கு இல்லை.அப்போது அவர்கள் அனைத்தையும் மதித்தார்கள்.ஆகவே அதனை கொல்லாமல் அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த முயன்றனர்.
பாம்புகள் இனப்பெருக்கம் மேற்கொள்வது மிகவும் வித்தியாசம். பெண் பாம்பு தான் உடலில் இருந்து ஒரு வித வாசனை திரவத்தை(பரோமோன்ஸ்) அனுப்பும் . அதனை நுகர்ந்து ஆண் பாம்பு பெண் பாம்பை தேடி வரும்.
பெண் பாம்பில் இருந்து வரும் வாசனையை கட்டுப்படுத்தும் வேலையை பால் முட்டையிலிருந்து வரும் வாசனை தடுக்கிறது .ஆகவே அவற்றால் இனப்பெருக்கம் செய்ய முடியாது.
இதன் முழுமையான காரணம் சொன்னால் நிச்சயம் ஒருவரும் பின்பற்ற மாட்டார்கள். அதனாலேயே பயமுறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

ref : https://www.facebook.com/GoatFarmErode?fref=nf
posted by ganesh - 9843479843


Monday 12 January 2015

Uses of Coriander - கொதமல்லியின் மஹிமை

தாவரப்பெயர் :- CORIANDRUM SATIVUM.
தாவரக்குடும்பம் :- UMBELLIFERAE (Apiaceae)
கொத்துமல்லி கரிசல்மண், செம்மண் நிலத்தில் நன்கு வளரும். இது இந்தியா முழுதும் காணப்படும்.
இது 50 சி.எம்.உயரம் வரை வளரக்கூடியது. சிறிய இலைகளும் சிறிய அடுக்கான வெள்ளை மலர்களைக் கொண்டிருக்கும். பூக்கள் முற்றி காய்கள் பச்சையாக இருக்கும். பின் காய்கள் காய்ந்தவுடன் மரக்கலராக மாறும். இந்த காய்கள் உருண்டையாக இருக்கும். இந்த விதைகளை தனியா என்று சொல்வார்கள்.
வாசனைக்காக சேர்க்கிறோம் என்று நம்மில் பலரும் நினைக்கலாம், நம் முன்னோர்கள் இதன் மருத்துவ குணம் அறிந்தே சமையலில் தவறாது சேர்த்து வந்திருக்கிறார்கள். எல்லா உணவையும் மணக்கச் செய்யும் மகிமை கொத்தமல்லிக்கு உண்டு. இதனுடைய விதை, இலை ரெண்டுமே மருத்துவக்குணம் கொண்டது. இதன் விதை, காரம், கசப்பு, துவர்ப்பு, இனிப்புன்னு நான்கு விதமான சுவைகளும் சேர்ந்த அற்புதக்கலவை
கொத்தமல்லி கீரையில் ஏ,பி,சி உயிர் சத்துக்களும், சுண்ணாம்புச்சத்தும், இரும்புச்சத்துக்களும் உள்ளன. மனிதனின் உடலை வலுவாகும் அத்தனை சத்துக்களும் இதில் இருக்கிறது.
உடலின் கொழுப்புச்சத்தை குறைத்து ரத்த நாளங்களில் கொழுப்பு உறைவதை தடுக்கிறது. இதனால் மாரடைப்பு ஆபத்தை குறைக்கிறது.
கண்பார்வை தெளிவடையும். சிறுவயதில் இருந்தே இந்த கீரையை குழந்தைகளுக்கு கொடுத்து வரவேண்டும்.இதனால் ஆயுள் வரை கண்பார்வை மங்காது. மாலை கண்நோய் உள்ளவர்கள் இந்த கீரையை அவசியம் சேர்த்து வந்தால் குறை நீங்கும்
ரத்தம் சுத்தமடையும், புதிய ரத்தம் உண்டாகும்.
இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையை குறைக்கிறது, இன்சுலின் சுரப்பைத் தூண்டுகிற ஆற்றல் இருப்பதால், சர்க்கரை நோயைக் குறைக்கும் தன்மை வாய்ந்தது.
கர்ப்பிணிகள் கர்ப்பம்தரித்த மாதத்தில் இருந்து சாப்பிட்டு வந்தால் குழந்தை மிக ஆரோக்கியமாக வளரும். குழந்தையின் எலும்புகள் பற்கள் உறுதி அடையும்.
பீனிசம்,மூக்கடைப்பு,மூக்கில்புண்,மூக்கில் சதை வளர்தல் போன்ற மூக்கு தொடர்புடைய அனைத்து வியாதிகளும் குணமடையும்.
தோல் நோய்களை குணமாக்குகிறது
மன அமைதி, தூக்கம் கொடுக்கும்
4 டம்ளர் தண்ணீர்ல ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி விதையைப் போட்டு நன்கு காய்ச்சி, ஆறவைத்துக் குடிக்கணும். இப்படி செஞ்சா உடல் சூடு தணியும்; களைப்பும் காணாமல் போயிடும்
ஐந்து கிராம் கொத்துமல்லி விதையை இடித்து அரை லிட்டர் நீரில் விட்டு 100 மில்லியாகக் காய்ச்சி வடிகட்டி, பால் சர்க்கரை கலந்து காலை மாலை சாப்பிட இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், வயிற்றுப் போக்கு ஆகியவை நீங்கும்.
புதிதாக ஏற்படும் வெட்டுக் கயங்களுக்கு கொத்தமல்லி விதையை பொடிசெய்து அதை காயத்தின் மீது அடிக்கடி தடவினால் புண் குணமாகும்.
கொத்துமல்லி இலை, சீரகம் சேர்த்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து கசாயம் செய்து அருந்தினால் சுவையின்மை நீங்கி பித்ததினால் ஏற்படும் தலைசுற்றல் நிற்கும்.
வீட்டில் தொட்டிகளில் வளர்க்க முடியும், வளர்க்கலாம்.
தனியாவை மணல் கலந்து விதைக்க வேண்டும். ஒரு வாரத்தில் விதைகள் முளைக்க ஆரம்பிக்கும். முறையாக நீர் ஊற்றி வந்தால் வீட்டிலேயே தேவையான கீரையை பறித்து சமையலுக்கு உபயோகிக்கலாம்.
தினசரி உணவில் தவறாது கொத்தமல்லி கீரையை சேர்த்துக்கொள்ளுங்கள். துவையல்,தொக்கு, கொத்தமல்லி சாதம்,ரசம், கொத்தமல்லி கீரை ஜூஸ் என ஏதோ ஒரு விதத்தில் உட்கொண்டு வாருங்கள். நோயற்ற ஆரோக்கியமான வாழ்வை மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.
ref: https://www.facebook.com/Siddha.Med/photos/a.492723334128773.1073741828.492721517462288/759452904122480/?type=1&theater
posted by ganesh - 9843479843






Saturday 10 January 2015

Simple medicine for fire accident - தீக்காயத்திற்க்கு எளிய மருந்து


மருந்தை தேடி அலைய வேண்டாம்...!
தீக்காயம் பட்ட உடன்,உடனடியாக குளிர்ந்த
நீரை சூடு குறையும் வரை காயத்தில் விடுங்கள்...
பின்னர் ஒரு முட்டையை எடுத்து அதன்
வெள்ளைக்கருவை பிரித்து காயத்தின் மேல்
படரும் படி தடவுங்கள்... சிறிது நேரத்தில்
வெள்ளைக்கருவானது காய்ந்து ஒரு பாதுகாப்பாகிறது...
சிறிது நேரத்தில் வலி முற்றிலும்
குறைந்து விடும்...இதை தொடர்ந்து செய்து வந்தால்.....
அடுத்த 10 நாட்களில் காயத்தின் தடயம் மறைந்து விடும்....
{தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு படையினர்
பயன்படுத்தும் யுக்தியும் இதுவே.}

ref : https://www.facebook.com/Ithutamizh/photos/a.411275902255528.83405.148828818500239/755178854531896/?type=1&theater

Thursday 8 January 2015

Vilvat's glory - வில்வத்தின் மகிமை

சிவ தலங்களில் வில்வத்திற்கு மிகவும் மகிமை உண்டு.லிங்கம் தொடர்பானதில் பூஜிக்க மிக உகந்தது இந்த வில்வ இலைகள் ஆகும் . இந்த வில்வ தழைகள் கிடைப்பதற்காக அனேகமாக ,சிவன் கோவில்களில் எல்லாம் வில்வ மரம் வளர்க்கப் படும் .வில்வம் குளிர்ச்சியூட்டும் குணமுடையது அதாவது இதை உண்டால் உடலாகிய பஞ்ச பூதம் வெகு எளிதில் அதிக சக்தியை செலவழிக்காமல் ஜீரணம் செய்த சக்தியும் சேமிப்பாகும் .சிவத்துக்குள் சக்தியை அதிகம் சேமிக்க செய்யும் ஒரு மூலிகையாக இது இருப்பதால் இது ஈசார்சனைக்குமிக உகந்ததாகும்.இதனை “சிவமூலிகைகளின் சிகரம்” எனவும் அழைப்பர் .
இந்த இலைகளை கொண்டு ஈசனை பூஜிப்பதால் சகல பாவங்களும் நீங்கும் இந்த வில்வ மரத்தினை வளர்ப்பதால் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும் .ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த பலன் கிடைக்கும் .புண்ணிய நீர் ஆடிய பலன் கிடைக்கும் .காசி முதல் ராமேஸ்வரம் வரை உள்ள சிவ தல தரிசனப் பலன் கிடைக்கும் .
வில்வ மரத்தில் அபார மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.வில்வ காயை பறித்து பார்த்தால் ,உருண்டையாகவும் ஓடு கடினமாகவும் வெளிர் மஞ்சள் நிறத்தையும் கொண்டது .இதன் பழமானது குடற் கோளாறுகளை நீக்கவும்,மலக்கட்டை நீக்கி உடல் சூட்டை தணிக்கும் தன்மை கொண்டது.
வில்வ இலை கசாயம் பருக கைகால் பிடிப்பு,உடல் வலி முதலியவை குறையும் மேலும் இந்த கசாயமானது கபம்,மூச்சுத் திணறல் ,பித்தம் போன்றவையை குணமாக்கும் .அது போல இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து வீக்கம் உள்ள உடல் பகுதியில் ஊற்றினால் அவை குறைந்து விடும் ., இரத்த அழுத்த நோய் கட்டுப்பாட்டிற்குள் வரும், சர்க்கரை நோயும் சீர்படுத்தப்படும், அல்சர் அணுவும் அணுகாது, ஜீரணக்கோளாறுகள் ஏற்படாது, உடல் குளிர்ச்சியாக இருக்கும், தோல் மீது பூசிவர தோல் அரிப்புகுணப்படுத்தப்படும்.
வில்வ வேர் கஷாயம் பருக அது நாடி நரம்புகளில் ஏற்படும் அதிர்வை போக்கி சாந்தமடையும் செய்யும் தன்மை கொண்டதாகும்
ப்ரோட்டின்,கொழுப்பு.கால்சியம் ,பாஸ்பரஸ் ,இரும்பு,உலோகச்சத்து ,மாசத்து ,கலோரி போன்றவை ஆப்பிள் ,மாதுளை போன்ற பழங்களில் இருப்பதை விட வில்வ பழத்தில் அதிகமாக உள்ளது என்பது வியக்க தக்கதே.
ஆரோக்கியத்திற்கு அரணாகவும் ,ஆன்மீகத்தில் முக்கிய இடம் பெற்றும் இருப்பதுமான வில்வமரத்தை புனிதமாகப் பேணி நன்மைகள் பலவும் பெறுவோமாக.
posted by Ganesh - 9843479843

Hair loss treatment - முடி உதிர்தல், இளநரை சரியாக

முடி உதிர்தல், இளநரை சரியாக
கரிசலாங்கண்ணி இலையை (200 கிராம்) மையா அரைச்சி, அதோட அரை லிட்டர் தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி பதத்துக்கு வந்ததும் இறக்கி வச்சிரணும். வழக்கமா தலைக்கு எண்ணெய் தேய்க்கிற மாதிரி அதை தேய்ச்சிட்டு வந்தா....முடி உதிர்றது, இளநரை எல்லாம் சரியாகும்.

கரிசலாங்கண்ணி சூரணத்தை கால் ஸ்பூன் எடுத்து, தேன் சேர்த்து சாப்பிட்டாலும் நரை விழுற பிரச்னை சரியாகும்.


மருதாணி இலை 300 கிராம், நல்லெண்ணெய் 1 1/2 லிட்டர், பசும்பால் 700 மில்லி சேர்த்து பதமா காய்ச்சி, தலைக்கு தேய்ச்சிட்டு வந்தா...கூந்தல் நல்லா வளரும். அதோட நரை விழுறதையும் தடுக்கும்.
posted by Ganesh - 9843479843

Wednesday 7 January 2015

Spices as remedies for common ailments - மசாலா மூலம் பொதுவான வியாதிகளுக்கு வைத்தியம்


COLDS:

Mix a gram of dalchini/cinnamon powder with a teaspoon of honey to cure cold. Prepare a cup of tea to which you should add ginger, clove, bay leaf and black pepper.. This should be consumed twice a day. Reduce the intake as the cold disappears.
Ginger tea is also very good to cure cold - cut ginger into small pieces and boil it with water, boil it a few times and then add sugar to sweeten and milk to taste, and drink it hot.

DRY COUGHS:

Add a gram of turmeric (haldi) powder to a teaspoon of honey for curing dry cough. Also chew a cardamom for a long time.

BLOCKED NOSE:

For blocked nose – congestion; take a table spoon of crushed carom seeds (ajwain) and tie it in a cloth and inhale it.

SORE THROAT:

A tea spoon of cumin seeds (jeera), a few small pieces of dry ginger boil in water for a few minutes, then let it cool. Drink it twice daily - cures cold and sore throat.

ASTHMA:

Boil ajwain in water and inhale the steam.

BACKACHE:

Rub ginger paste on the backache to get relief.

HIGH BLOOD PRESSURE:

Have 1-2 pod garlic (lasan) first thing in the morning with water
1 table spoon each of honey, ginger (adrak) juice and crushed cumin seeds (jeera) - twice daily.

MIGRAINE – COLD IN THE HEAD:

Boil a tablespoon of pepper powder, a pinch of turmeric powder in a cup of milk - have it for a few days.

BLOOD SUGAR/ DIABETES:

A tablespoon of amla juice mixed with fresh bitter gourd (karela) juice and taken daily for 2 months reduces blood sugar.

CURE FOR INJURIES:

For cuts or wounds, apply turmeric powder to stop bleeding and also works as an antiseptic. You can tie a bandage after applying haldi/turmeric.

CRAMPS:

Mustard oil taken between the palms and rubbed all over your body, then take a shower (especially beneficial during winter). Make a paste of mustard powder in water and apply on palms of hands and and soles of feet.

HEADACHES:

If you have a regular migraine problem, take five almonds along with hot milk every day. If required add one gram of black pepper and honey and take twice or thrice a day. Make an almond paste by rubbing wet almonds against a stone - applied on forehead.
Eat an apple with a little salt on an empty stomach everyday and see its wonderful effects.
When headache is caused by cold winds, cinnamon is the best cure - paste of cinnamon and water applied over forehead

GOOD FOR THE HEART, ARTHERITIS & INDIGESTION:

Turmeric can be used in treating arthritis due to its anti-inflammatory property. Turmeric taken as a drink in milk everyday helps preventing most problems.
Turmeric lowers cholesterol, prevents formation of internal blood clots, improves circulation and prevents heart disease/ stroke.
Turmeric can be used to relieve digestive problems like ulcers, dysentery, etc.
HONEY IS A GOOD FOR MOST PROBLEMS:
1 teaspoon each of honey and cinnamon powder and at night.

HICCUPS:

Warm slice of lemon, sprinkle salt, sugar and black pepper – chewed till the hiccups stop.

HIGH CHOLESTEROL:

1 glass of water and 2 table spoons of coriander/dhania seeds boiled. Strain and drink two times in a day.
Sunflower seeds contain linoleic acid that helps in reducing the cholesterol deposits on the walls of arteries.

PILES:

Radish juice taken twice a day, morning and in the night. Initially drink about half a cup gradually increase it to a cup.
Soak 3-4 figs in a glass of water overnight and taken on an empty stomach in the morning.

VOMITING:

Roast 2 cardamoms/elaichi on a dry pan (tava). Powder the cardamoms, add a tsp of honey and keep taking at short intervals till vomiting stops OR mix 1 tsp each of honey, mint and lime juice, add 1/2 tsp of ginger juice OR just a glass of chilled limejuice sipped slowly OR a glass water and some honey sipped slowly.

WARTS:

Apply castor oil daily over the area for several months OR Apply milk of fresh unripe figs a few times a day for two weeks OR Rub cut raw potatoes on the affected area several times daily for at least two weeks OR Rub cut onions on the warts to stimulate blood circulation OR Apply milk from the cut end of dandelion over the warts 2-3 times a day OR Apply oil extracted from the shell of the cashew nut over the warts OR Apply raw Papaya milk OR Apply fresh Pineapple juice.

URINARY TRACT INFECTION

Take 8 oz of water and 1 tea spoon of baking soda OR Drink plenty of water, as it aids in flushing out the waste products from the body OR Drink Cranberry juice also can add some apple juice for taste.

SINUSITIS

Mango is a remedy for preventing the frequent attacks of sinus, as it is packed with loads of vitamin A OR consume pungent foods like onion and garlic, as a part of your daily meals OR Fenugreek/methi leaves are also very helpful.


posted by Ganesh - 9843479843


Tuesday 6 January 2015

How to get rid of ticks/fleas - பூச்சி / உண்ணியில் இருந்து விடுபட

அனைவருக்கும் வணக்கம். நாம் வளர்க்கும் நாய்களுக்கு தோலில் பூச்சி / உண்ணி இருக்கும்.அது நாய்களுக்கு என்ன பிரச்சனை தரும் என்பது நாம் அரிந்ததே. அதர்க்காக நாம் எடுக்கும் அடுத்தகட்ட முயர்ச்சி ஆங்கில மருந்துகள். பூச்சினால் வரும் பாதிப்பை விட மருந்ந்தினால் வரும் பாதிப்பே அதிகம். நாயின் முதுகில் மருந்தை ஒரு கோடாக போட்டால் அனைத்து பூச்சியும் தோலில் ஒட்டியபடி செத்துவிடும். இதுபோன்ற மருந்து தோலில் ஊடுருவி இரத்தத்தில் கலக்கிறது. இதனால் கண்டிப்பாக நாய் குட்டிகளுக்கு ஈரலில் பாதிப்பு ஏர்படும். 

கிராமங்களில் மூத்தவர்களிடமிருந்து சேகரித்த பக்கவிளைவு இல்லாத சக்திவாய்ந்த மருத்துவ குரிப்பு இதோ......


வசம்பு


ஓமவல்லி இலை


நிலவேம்பு


வேப்பங்கொழுந்து


பூண்டு


சோற்றுக்கற்றாழை


இதை அனைதையும் அரைத்து நாயின் மேல் முடியின் எதிர்புறமாக தேய்த்து அறைமணி நேரம் கழித்து கழுவிவிடலாம். கண்டிப்பாக மழை காலங்களில் பயன்படுத்தக் கூடாது. 
இது அனைத்தையும் நிழலில் காய வைத்து திருநீரில் களந்து பவுடராகவும் பயன்படுத்தலாம்.




posted by ganesh - 9843479843