தடுப்பூசியும், நோய்த்தடுப்பு முறைகளும்.
1.தடுப்பூசி (Vaccine) என்றால் என்ன?
தடுப்பூசி என்பது நோய்க்கு காரணமான பாக்டீரியா மற்றும் வைரஸ் நோய்க்கிருமிகளின், நோய் உண்டாக்கும் திறனை குறைத்து அல்லது வீரியத்தை குறைத்து ( Virulence) தடுப்பூசி தயாரிக்கப்படுகிறது. இவ்வாறு தயாரிக்கப்படும், தடுப்பூசிகள் உடம்பில் ஊசியாக செலுத்தப்படும்பொழுது, நோய் எதிர்ப்புயிரிகளை(Antibodies) உண்டாக்கி கொடிய நோய்களுக்கு எதிராக நோய் எதிர்ப்பு(Immunity) உண்டாகி, பல கொடிய நோய்களில் இருந்து நாய்க்குட்டிகளை காப்பாற்றுகின்றது.
2.நாய்க்குட்டிகளுக்கு தடுப்பூசி (Vaccine) போட வேண்டுமா?
தாய் நாய்களுக்கு சரியான முறையில் தடுப்பூசி போடப்பட்டு இருந்தால் நோய் எதிப்புயிரிகள்(Antibodies) தாய் நாயின் பாலின்(Milk) வழியாக பால் ஊட்டும் பொழுது புதிதாக பிறந்த நாய்க்குட்டிகளுக்கு சென்றடைந்து, குட்டிகளை பல்வேறு நோய்களில் இருந்து 28 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை (3 மாதம்) காப்பாற்றுகின்றது. தாய் நாயின் பால் வழியாக பெறப்பட்ட நோய்எதிர்ப்புச்சக்தி படிப்படியாக குறைந்து போய்விடும். இந்த நோய் எதிர்ப்பு சக்தி குட்டிகளில் குறையும் நாட்களை வைத்தே தடுப்பூசி போடப்பட வேண்டிய நாள் கணக்கிடப்பட்டு மற்றும் தடுப்பூசி போட வேண்டிய கால அட்டவணை (Vaccination) போடப்படுகிறது. உதாரணமாக வெறிநாய்க்கடி (ரேபிஸ்-Rabies) நாய் கடிப்பதால் உண்டாகும் கொடிய நோய்களுக்கு எதிரான எதிர்ப்புசக்தி 90 நாட்களில் குறைந்து விடும். ஆகையால் நாய்க்குட்டிக்கு பிறந்த மூன்றாவது மாதத்தில் (90வது நாள்) ரேபிஸ் நோயை தடுக்கும் தடுப்புசி-ஆன்டடி ரேபிஸ் தடுப்பூசியை (ARV-Anti Rabies Vaccine) கண்டிப்பாக போட வேண்டும்.
3.நாய்க்குட்டிகளை பொதுவாக தாக்கும் கொடிய நோய்கள் (Fatal Disease) மற்றும் அவற்றின் அறிகுறிகள் (Symptoms) யாவை?
1.கேனைன் பார்வோ வைரஸ் (Canine Parvo Viral Infection)
இவை வேகமாக பரவக்கூடிய உயிர்க்கொல்லி நோயாகும். பார்வோ வைரஸ் அதிகமாக 2 மாதங்களுக்கு உட்பட்ட நாய்க்குட்டிகளை தாக்கி கொல்கின்றது. இவை குடலைத்தாக்கி(Intestinal Form) அதிகப்படியான, இரத்தம் கலந்த வயிற்றுப்போக்கையும் (Bloody and Brownish Diarrhoea) வாந்தியையும்(Vomiting) ஏற்படுத்துகின்றது. முறையான சிகிச்சை செய்தால் இந்நோயிலிருந்து காப்பாற்றலாம். ஆனால் சில நாய்க்குட்டிகளில் இதயத்தை(Cardiac Form) தாக்கி மரணத்தை ஏற்படுத்தும். இந்த நோயை தடுப்பூசி போடுவதன் மூலம் கண்டிப்பாக தடுக்கமுடியும்.
2.கேனைன் டிஸ்டம்பர் (Canine Distemper)
இந்த நோய் மூளையைத்தாக்கி(Brain) காக்கா வலிப்பு (Seizure And Convulsion) பல்லை விட்டு விட்டு தொடர்ந்து கடித்து கொள்ளுதல், நுரையீரலை கடுமையாகத் தாக்கி சுவாசக்கோளாறு (Pneumonia) மற்றும் சளியை உண்டாக்குகின்றது. மேலும் கண்ணில் நீர் வடிதல்(Conjunctivitis) வயிற்றின் அடிப்பகுதி தோல் பகுதிகளில் தோல் நோய் நோய், காய்ச்சல்(Fever) வாந்தி (Vomiting) மற்றும் வயிற்றுப்போக்கை( Diarrhoea) ஏற்படுத்துகின்றது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட நாய்க்குட்டிகள் உயிர் பிழைப்பது மிக அரிது. ஆனால் முறையாக தடுப்பூசி போடுவதன் மூலம் கண்டிப்பாக தடுக்கலாம்.
3.இன்பக்சியஸ் கேனைன் கெப்படைட்டிஸ் (Infectious Canine Hepatitis)
இது கல்லீரலைத் தாக்கி மஞ்சள் காமாலையை(Jaundice) உண்டாக்கும் கொடிய நோயாகும். மேலும் இவை மண்ணீரல்(spleen), நுரையீரலைத்(Lung) தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தும் கொடிய நோயாகும். இந்த நோய்த்தாக்கி பிழைக்கும் நாய்களின் கண்கள் நீலநிறமாக(Blue eye) மாறி பார்வைத்திறனை குறைத்துவிடும். இதனையும் தடுப்பூசி போடுவதன் மூலம் தடுக்கலாம்.
4.கேனைன் பாரா இன்புளுயன்சா (Canine Parainfluenza)
இவை சுவாசக்கோளாறு மற்றும் சளியை ஏற்படுத்தும்.
5.கேனைன் கரனோ வைரஸ் (Corona Viral Infection)
இவை குடலைத்தாக்கி வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியைஏற்படுத்தும்.
6.ரேபிஸ் (Rabies-வெறிநோய்)
இது மிகக் கொடிய நோயாகும். இந்த நோயால் பாதிக்கப்பட்ட நாய்களும், மனிதர்களும் கண்டிப்பாக இறந்துவிடுகிறார்கள். ரேபிஸ் நோய், நாய் கடிப்பதன் மூலம் மனிதர்களுக்கும்(Zoonotic Disease) பரவுகின்றது. ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட தெரு நாய்கள் வீட்டில் வளர்க்கும் நாய்களை கடிக்கும் பொழுது இந்த நோய் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளையும் தாக்கி கொல்கின்றது. ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நாய்கள் 10 நாட்களுக்கு இறந்துவிடும். இந்த நோய் மூளையையும் (Brain) மற்றும் தண்டுவடத்தையும் Spinal Cord) தாக்கி நரம்பு மண்டலத்தை (Central Nervous System) செயலிழக்கச் செய்யும். இந்நோயின் அறிகுறிகள் அளவுக்கு அதிகமாக எச்சில் ஊற்றுதல்(Salivation), வெளிச்சத்தை பார்த்து பயப்படுவது(Photophobia), தண்ணீர் குடிக்க பயப்படுதல்(Hydrophobia), ஊளையிடுதல் (Howling)) போன்ற அறிகுறிகள் காணப்படும். ரேபிஸ் நோயை தடுப்பூசி போடுவதன் மூலம் மட்டுமே தடுக்க முடியும்.
7.கேனைன் லெப்டோஸ்பைரோஸிஸ் (Canine Leptospirosis)
எலிக்காய்ச்சல்: இது எலியின் (Rat) சிறுநீர் மூலமாக வெளியேரும் பாக்டீரியாக்கள் (Spirochetes) மழை நீரில் கலப்பதன் மூலம் நாய்களுக்கும், மனிதர்களுக்கும் மழைக்காலங்களில் (Zoonotic Disease) எளிதாக பரவும் நோயாகும். இவை கல்லீரலைத் (Liver) தாக்கி மஞ்சள் காமாலையை ஏற்படுத்துகின்றது. மேலும் இது சீறுநீரகத்தைத் தாக்கி (Kidney) சீறுநீரகத்தின் செயல்பாட்டை (Nephritis) குறைக்கின்றது. பாக்டீரியாவால் ஏற்படும் இந்த எலிக்காய்ச்சலையும், தடுப்பூசி போடுவதன் மூலம் வராமல் தடுக்கலாம்.
4.நாய்களுக்கு எந்த வயதில், என்னென்ன தடுப்பூசிகள் போட வேண்டும்?
• நாய்க்குட்டி பிறந்த 4வது வாரம் (28வது நாள்) – Nobivac Puppy DP தடுப்பூசி
• நாய்க்குட்டி பிறந்த 8வது வாரம் (56வது நாள்) –Nobivac DHPPi
• நாய்க்குட்டி பிறந்த 10 முதல் 12வது வாரம்(70 முதல் 90 நாட்களுக்குள்)= Nobivac DHPPi (Booster Dose)
• 12வது வாரம் (90வது நாள்) - Anti Rabies Vaccine (ARV)
• ஒவ்வொரு வருடமும் NOBIVAC DHPPi மற்றும் ARV ஆகிய இரண்டு தடுப்பூசிகளை கண்டிப்பாக போட வேண்டும்
1 .Nobivac Puppy DP (D for Distemper and P for parvo viral infection) - டிஸ்டம்பர் மற்றும் பார்வோ நோயைத் தடுக்கும்.
2. Nobivac DHPPi - இது கேனைன் டிஸ்டம்பர் (Canine Distemper), பார்வோ வைரஸ் (Parvo Viral Enteritis), இன்பக்ஸுயஸ் கேனைன் கெப்படைட்டிஸ் (Infectious Canine Hepatitis), கேனைன் பாரா இன்புளுயன்சா (Canine Parainfluenza) மற்றும் கெனல் காஃப் (Kennel Cough) ஐந்து கொடிய நோய்களைத் தடுக்கின்றது.
3. Nobivac Lepto – எலிக்காய்ச்சல் (Leptospirosis) நோயைத் தடுக்கின்றது.
4. ARV (Anti Rabies Vaccine) – வெறிநாய்க்கடியால் வெறிநோயை (Rabies) த்தடுக்கின்றது.
posted by ganesh - 9843479843
No comments:
Post a Comment