சிப்பிப்பாறை மற்றும் கன்னி இன நாய்களின் பரிணாமம்.
பொதுவாக நாய்கள் அனைத்தும்(Grey wolf) ஓநாயின் வழித்தோன்றல்களே. நாய்களின் குண நலன்களும், மரபியல் பண்புகளும் ஓநாயை போன்றே உள்ளது என பல்வேறு மரபியல் சோதனைகளின் ( DNA Studies) முடிவுகள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டு வேட்டை நாய் இனமான கன்னி மற்றும் சிப்பிப்பாறை ஆப்பிரிக்க கண்டத்தின் சலூக்கி (Saluki) இன வகையின் வழித்தோன்றலாகவே கருதப்படுகிறது.
தமிழ்நாட்டு வேட்டை நாய் இனமான கன்னி மற்றும் சிப்பிப்பாறை ஆப்பிரிக்க கண்டத்தின் சலூக்கி (Saluki) இன வகையின் வழித்தோன்றலாகவே கருதப்படுகிறது.
சலூக்கி நாய்களைப் பற்றி பைபிளில் குறிப்புகள் உள்ளன. சலூக்கி நாய் ராஜ வம்ச நாய் இனமாக ( Royal Ancient Dogs) இன்றளவிலும் மதிக்கப்பட்டு வருகிறது.
சரி இந்த வகை நாய் இனங்கள் எப்படி கடல் கடந்து தமிழகத்தின் தென் பகுதியை அடைந்தது என கேள்வி எழுவது இயல்பே. இதை நாம் எளிதாகப் புரிந்து கொள்ள இயலும் இன்று தனித் தனி கண்டங்களாக பிரிந்து காணப்படும் உலகம் ஒரு காலத்தில் பூமியின் தென் பகுதியில் ஒரு பெருங்கண்டமாக இணைந்தே இருந்தது. இவ்வாறு ஒன்றிணைந்திருந்த நிலப்பரப்பு பிரிந்து வெவ்வேறு திசைகளில் தனித் தனி கண்டங்களாகப் பிரிந்த பொழுதோ( Continental Drift) அல்லது புலம் பெயர்ந்த மக்களுடன் சேர்ந்து சலூக்கி இனமும் தமிழகத்தின் தென் பகுதியான லெமூரியா கண்டத்தை அடைந்துஇருப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாகவே உள்ளது.
எடுத்துக்காட்டாக மதுரை மாவட்டம் ஜோதிமாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்த விருமாண்டி தேவரின் குரோமோசோமில் (Chromosomes) உள்ள M130 ஜீன் ஆப்பிரிக்க பழங்குடியினரிடமும் காணப்படுகிறது. இந்த M130 ஜீன் பொதுவாக சுமார் 70 ஆயிரம் வருடங்களுக்கு முன் ஆப்பிரிக்க கண்டத்திலிருந்து புலம் பெயர்ந்து உலகின் பல்வேறு கண்டங்களில் குடி அமர்ந்த மக்களிடையே காணப்படுகிறது. விருமாண்டித் தேவரின் முன்னோர் பல்லாயிரம் வருடங்களுக்கு முன், ஆப்பிரிக்காவிலிருந்து தமிழகத்தின் தென்பகுதிக்கு புலம்பெயர்ந்தது(migration) ஆராய்ச்சியின் மூலம் தெள்ளத் தெளிவாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இதே போன்று இன்று ஆப்பிரிக்க கண்டத்தில் காணப்படும் சலூக்கி (Saluki), தமிழகத்தின் தென் பகுதியை அடைந்து, சீதோஷ்ண மற்றும் பருவகால மாற்றங்களால், தங்கள் உடலமைப்பை மாற்றி (தகவமைப்பு) இன்று உள்ள கன்னி மற்று சிப்பிப்பாறை நாயாக மாறி இருக்கக்கூடும்.
No comments:
Post a Comment