Translate this blog

Search This Blog

Tuesday 13 January 2015

A small imagination - ஒரு சிறிய கற்பனை

ஒரு சிறிய கற்பனை : ( நிஜமானால் நிச்சயம் சந்தோஷமே ) 

இந்த கணிப்பொறி துறையில் வேலை பார்த்த வல்லுனர்கள் வெளியில் அனுப்பி விட்டதாக தகவல்கள் படித்தேன் .
அப்படி வந்த நண்பர்கள் அனைவரும் அல்லது சிலர் ஒன்று இணைந்து ஒற்றுமையாக ஒரு விவசாய குழுவை அமைத்து களத்தில் நேரடியாக இறங்கினால் மிக பெரிய மற்றம் நிகழும் .

முதலில் குத்தகைக்கு 5 முதல் 6 வருடங்கள் நிலம் பிடித்து குறைந்தது 10 முதல் 20 ஏக்கர் வரை ஒரு திட்டம் போட்டு ஒருகிணைந்த பண்ணையம் அமைத்து வெற்றி பெறலாம் .

இங்கு கிடைப்பதை வைத்து உண்மையான சந்தோஷம் அடையலாம் .போலியான வாழ்க்கை இல்லாமல் போகும் . இதில் இழக்கவேண்டிய போலி சந்தோஷம் மிகவும் அதிகம் .அதனை ஏற்று கொள்ளும் மன பக்குவம் தேவை .இதில் பணம் கணிபொறி துறை வருவது போன்று பணம் வராது .போலியான நிறைய விடயங்கள் இல்லை என்பதால் நிச்சயம் வரும் பணம் சந்தோஷமான நிம்மதியை கொடுக்கும் .

முக்கியமாக நேரடியாக களத்தில் இயங்க வேண்டும் . சிறிது காலத்திருக்கு பிறகு வேலைக்கு ஆட்கள் அழைக்காமல் நேரடியாக வேலை செய்ய வேண்டும் .( ஆரம்பத்தில் மிகவும் கஷ்ட பட வேண்டி வரும் சிறிது காலத்தில் மனம் சந்தோசமும் ,உடலும் ஆரோக்கியம் அடையும் .

இங்கு எதுவும் ஒரு பட்டன் தட்டினால் கிடைக்காது என்பதையும் மனதில் கொள்ள வேண்டும் . பொறுமை மிக அவசியம் .நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ஷி காண முடியும் .வலக்கை அனுபவித்து நிஜமான ஒரு வாழ்கை இருக்கும் .

பயிற்சிக்கு உதவுகிறேன். பயிற்சி என்றால் ஒரு விவசாயி உடன் அவர்களின் நிலத்தில் நேரடியாக 3 மாதம் தங்கி கற்றுக்கொள்ள வேண்டும் . ( மற்ற விசயங்களை பின்பு பேசுவோம் ) .


### உங்கள் கருத்துக்களையும் பகிரவும் . ###

1. பசு / எருமை கன்றுகள் வாங்கி வளர்த்து விற்பனை செய்யலாம் ( வருட வருமானம் )

2 . பல வகையான கீரைகள் விளைவிக்கலாம் ( நிச்சயம் பயிற்சி எடுத்தவர்கள் இருக்கலாம் )

3. காய்கறிகள் பயிர் செய்யலாம் .அதில் விதைகள் மூலம் வருமானம் பார்க்க இயலும் . விதையும் சேமிப்பு நடக்கும் .

4.பல வகையான ( முட்டைஉற்பத்தி / கறி /அழகு )கோழிகள் ,சில வகையான வாத்துக்கள் ,ஆடுகள் வளர்க்கலாம். ஏன் வாய்ப்பு இருந்தால் குறைந்த விலையில் விருக்கும் அழகு கிளிகள் ( Loverbirds) வளர்த்து விற்பனை செய்யலாம் .

5.மானாவாரியில் வரும் சிறுதானிய பயிர்களை வளர்த்து பயன் அடையலாம். ( மதிப்பு கூட்டலாம் )

6.பால் உற்பத்தி செய்தும் மோர், தயிர் , நெய் என்று மதிப்பு கூட்டி செய்தால் விற்பனை வாய்ப்பு கிடைக்கும் .

7.கிடைக்கும் கழிவுகளை பயன் படுத்தி உரம் தயாரிக்கலாம் .

8. ஒரு குழுவினர் வீட்டு தோட்டம் அமைத்து கொடுக்கலாம் , பராமரிப்பு சேவை .

9 . தரமானதாக நேரடியாக கடை வைத்தோ , சந்தைகளில் விற்கலாம் .இன்றும் மக்களிடம் நல்ல பொருட்களை தேடி வாங்கும் வழக்கம் உள்ளது

10. தீவன பயிர்கள் உற்பத்தி செய்து விற்பனை செய்யலாம் .


இது என் முகநூல் நண்பரின் கற்பனை எண்ணுடாதும் கூட...

ref : https://www.facebook.com/photo.php?fbid=1582840915285939&set=a.1412179945685371.1073741828.100006801365349&type=1

posted by Ganesh - 9843479843



No comments:

Post a Comment