Translate this blog

Search This Blog

Tuesday 6 January 2015

How to choose combai dogs - கோம்பை நாய்குட்டிகளை எப்படி கண்டறிந்து வாங்குவது

1.தரமான கோம்பை நாய்குட்டிகளை எப்படி கண்டறிந்து,வாங்குவது ?
வாங்கபோகும் கோம்பை நாயிக்குட்டியின் அப்பா மற்றும் அம்மாவின் தோற்றம்,உயரம்,மற்றும் குணம் அறிந்து குட்டிகளை,தேர்வு செய்தல் சிறப்பான முறையாகும்.
2.கோம்பை நாயிக்கும் மற்றும் மாங்ரல் (mongrel ) என அழைகக்ப்படும் சாதாரண தெரு நாய்களுக்கும்(stray dogs) இடையே உள்ள வேறுபாடு என்ன?
கோம்பை நாய், இந்தியா நாயினங்களை(Indian native dogs or indian pariah dogs) தேர்வு செய்து, தேர்ந்தெடுக்கப்பட்ட இனக்கலப்பின் (selective breeding)மூலம் உருவாக்கப்பட்ட வீரமிக்க இனமாகும். கோம்பை நாய்கள், கன்னி சிப்பிப்பாறைகளை விட உயரத்தில் குறைந்ததாகவும், (சராசரியாக 20 முதல் 25 அங்குலம் உயரம் கொண்டது) உடல் சற்று பருமனாகவும், அகன்று விரிந்த மார்பு பகுதியையும், முறுக்கேரிய சதைகளும், மூக்கின் நுனிபகுதி கருப்பாகவும் (black mask) காணப்படுகிறது. இதன் தாடைகள் (jaw) மிக வலிமையாகவும், தலைப்பகுதி (Dolichocephalic) கன்னி, சிப்பிப்பாறை போல் இல்லாமல் சற்று அகன்று (Mesaticephalic)காணப்படும்.கோம்பை நாய்கள் பல்லாயிராம் வருடங்களாக வெப்பமண்டல (tropical climate ) பகுதியில் வாழ்ந்த இனமாகும்.எனவே இவைகள் மிக நீளம் குறைந்த,குட்டையான ரோமங்களை மட்டுமே( short coat) பெற்று இருக்கும்.
மாங்ரல் (mongrel ) என அழைகக்ப்படும் சாதாரண தெரு நாய்கள், இந்தியா நாயினங்களுக்கும்(Indian native dogs) மற்றும் பல்வேறு அந்நிய நாயினங்களான, ஆங்கிலேயேர்களால் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்ட ஜெர்மன் ஸ்பிட்ஸ்(German spitz) லிருந்து தோன்றிய இந்தியன் ஸ்பிட்ஸ்(Indian spitz ), ஜெர்மன் ஷெபர்ட்(Germen shepherd ), லாப்ரடார்(Labrador) மற்றும் பிற அந்நிய இன நாய்களுக்குமிடையே நடந்த இனக்கலப்பின் தோன்றிய நாய்களே , மாங்ரல் (mongrel or mutt ) என அழைகக்ப்படுகின்றன. இவைகள் உடல் மற்றும் வால் பகுதியில் அடர்த்தியான,நீண்ட ரோமங்களை பெற்றிருக்கும்,மூக்கு நீண்டும், மார்பு பகுதி குறுகியும், சிறிய தலை மற்றும் குறைவான தசைகளையும் பெற்றிருக்கும்.(குறிப்பு-இந்த இந்தியன் ஸ்பிட்ஸ்(indian spitz ),பொதுவாக பொமரேனியன் (Pomeranian) என்று நம்மால் தவறாக இன்றும் அழைக்கப்படுகிறது, பொமரேனியன் என்பது ஜெர்மனி நாட்டின் ஒரு பகுதியை குறிக்கும்,இந்த பொமேரனியன் உருவத்தில் மிகமிக சிறியதாக இருக்கும்.
3.தாரமான, கோம்பைக்கான அனைத்து அம்சங்களும் பொருந்திய பெற்றோருகளுக்கு பிறந்த கோம்பை நாய்க்குட்டிகள், மாங்ரல் (mongrel or mutt ) என அழைகக்ப்படும் சாதாரண தெரு நாய்கள் போல வளர வாய்ப்பு உள்ளதா?

கண்டிப்பாக வளர வாய்ப்புள்ளது,நீங்கள் வாங்க போகும் தரமான கோம்பை நாய் பெற்றோர்களின் பரம்பரையில் (ரெண்டு அல்லது மூன்று தலைமுறைக்கு முன்) அந்நிய இன நாய்களின் இனக்கலப்பு இருந்தால், ஒரே நேரத்தில் பிறந்த குட்டிகளில்,ஒரு சில குட்டிகள் மாங்ரல் (mongrel or mutt ) என அழைகக்ப்படும் சாதாரண தெரு நாய்கள் போல வளர வாய்ப்புள்ளது.இவ்வாறு வரும் குட்டிகளை எதிர் காலத்தில் இனபெருக்கதிருக்கு பயன்படுத்தாமல் , நல்ல தரமான கோம்பை நாய்களை மட்டுமே தேருந்துத்டுத்து தொடருந்து இனப்பெருக்கம் செய்து வந்தால் ,இந்த மாங்ரல் (mongrel or mutt ) என அழைகக்ப்படும் சாதாரண தெரு நாய்கள் போல குட்டிகள் வருவதை தடுக்கலாம்.


posted by ganesh - 9843479843


1 comment:

  1. Wynn Las Vegas and Encore LEG - JT Hub
    Hotel 서울특별 출장안마 Description: 여수 출장안마 Wynn Las Vegas and Encore 삼척 출장샵 LEG at the Wynn 거제 출장샵 Hotel and Casino in Las Vegas 제천 출장마사지 is a high-end resort, offering luxury suites and villas

    ReplyDelete