Translate this blog

Search This Blog

Tuesday 6 January 2015

Rajapalayam Dog - ராஜபாளையம் நாய்

ராஜபாளையம் நாய் (Rajapalayam Dog)

ராஜபாளையம் நாய்கள் நாயக்கர் வம்சத்தை சேர்ந்த, விஜய நகர அரசர்களால் ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டது. அந்த இனம் ஆங்கிலேய குதிரை படைகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி, குதிரைப் படைகளுக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தியது.
ராஜபாளையம் இனவகை நாய்கள் குதிரையின் பின்னங்காலில் உள்ள குதிகால் நரம்புகளை (Achilles tendon or Hamstring) கடித்துக்குதறி, பெரும் காயத்தை உண்டாக்கும் வகையில் பயிற்சி அளிகப்பட்டு, ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் பெருமளவில் பயன்படுத்தப்பட்டது. குதிகால் நரம்பு அறுபட்ட குதிரையால் ஆயுட்காலம் முழுதும் நிற்கவோ நடக்கவோ முடியாது. ராஜபாளையம் நாய்கள் வீரபாண்டிய கட்டபொம்மானாள் பொலிகார் போரிலும், திப்பு சுல்தானால் கர்நாடக போரிலும் மிக அதிக அளவில் பயன்படுத்தபட்டதாக வரலாற்று குறிப்புகள் கூறுகின்றது. இவைகள் குதிரைப்படையில் முன் வரிசையில் ஓடும் முன்னணி படை வீரர்களாகவும், படைகள் காடுகளை கடந்து செல்லும்பொழுது கொடிய மிருகங்களிடமிருந்து படைவீரர்களை காப்பாற்றவும் பயன்படுத்தப்பட்டது. ராஜபாளையம் நாய் இந்திய ராணுவத்தால் எல்லை பாதுகாப்பு பணியில் குறிப்பாக காஷ்மீரில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தியா தபால் துறை ராஜபாளையம் நாய்களை கவுரவப் படுத்தும் வகையில்,தபால் தலை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
ராஜபாளைய நாய்க்குட்டிகள் கண்கள் விழிப்பதற்கு முன்பே வளர்க்க விரும்புவர்களால் வாங்கி செல்லப்பட்டு, கண்கள் திறக்கும் பொழுது அவர்கள் முகத்தில் விழிக்க வைக்கும் பழக்கம் இன்றும் தமிழகத்தின் சில பகுதிகளிலும், கேரளா மக்களாலும் பின்பற்றப்படுகிறது. மேலும் ராஜபாளையம் குட்டிகளை வாழை இலையில் வைத்துக் கொடுக்கும் பழக்கமும் நிலவி வருகின்றது.
ராஜபாளையத்தின் உடல் பால் போன்ற வெண்மை நிறத்திலும் (Milk white) அழகிய ரோஸ் நிறத்திலான மூக்கையும்(Pink nose),அடிபாதத்தையும்(Paw) உடையது. இது ராஜபாளைய நாய்களுக்கு மட்டுமே உரிய ஒரு தனிச்சிறப்பாகும். உயரம் 28 அங்குலம் வரை மட்டுமே இருக்க வேண்டும். இவைகளின் கண்கள் பழுப்பு நிறத்தில் (Golden eyes)காணப்படும். வெள்ளிக் கண்(Pearl eye) மற்றும் இளம் ஊதா (Blue eyes) நிறக் கண்களுடன் பிறக்கும் நாய்க்குட்டிகள் பெரும்பாலும் காது கேளாத்தன்மை (Deaf) கொண்டதாகவே இருக்கும். அதற்கு முக்கிய காரணம் ஆரம்ப காலத்தில் பல்வேறு நிறங்களில் காணப்பட்ட (கருப்பு, கருப்பு கலந்த வெள்ளை, பழுப்பு) இவைகளை தேர்ந்தெடுத்த இனக்கலப்பின் (Selective Breeding) மூலம் அல்பினோ (Albino) வகை நிறமாக மாற்றியதே முக்கிய காரணமாகும், அல்பினோவில் மெலனின் (Melanin pigments) எனப்படும் தோலுக்கு நிறத்தை அளிக்க கூடிய நிறமிகள் சுத்தமாகவே இருக்காது. இதனாலேயே ராஜபாளைய இன நாய்களின் மூக்கு இளம் ரோஸ் (Pink nose)நிறத்தில் உள்ளது. அல்பினோ வகை நாய்கள் பாரம்பரிய நோய்கள் (Inherited diseases) மற்றும் தோல் சம்பந்தமான நோய்களால் அதிகம் பாதிக்கப்படுகிறது. இவைகளில் புறஒட்டுண்ணியால் (Ectoparasites) உண்டாகும், மேன்ஞ் (Mange) என அழைக்கப்படும்,தோல் நோய் அதிகமாக வர வாய்ப்பு உண்டு.
குண நலன்கள்
ராஜபாளையம் மிக அதிகமாக காட்டுப் பன்றிகளை (Boar) வேட்டையாட இன்றளவும் பயன்படுத்தப்படுகிறது. இவை எஜமானர்களின் வார்த்தைகளுக்கு மட்டுமே கீழ்ப்பணிந்து நடக்கும் (One man dog). இவைகள் அதன் எஜமானர்களுடனும், குழந்தைகளுடன் மிக பாசமாகவும் விசுவாசமாகவும் பழகக்கூடிய குணம் கொண்டவை. ,,,,

posted by ganesh - 9843479843









No comments:

Post a Comment